இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் 22,902,965 ரூபா மோசடி நடந்துள்ளதாக அரசாங்கத்தின் கணக்காய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளத.
2006ஆம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரையிலான 6 வருட காலத்தில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சுக்கும், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கும் இலங்கையின் கண்காய்வு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
களுத்துறை பிரதேசத்தில் மைதானமொன்றை மேம்படுத்துவதற்காக இத்தாலியில் இருந்து கிடைத்த 628,7670 ரூபா, ஆசிய கால்பந்தாட்டப் போட்டிகள் 2008ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போது கிடைத்த 6,415,290 ரூபா, சுனாமி நிவாரணத் திட்டத்திற்காக தனியார் நிறுவனமொன்றில் இருந்து கிடைத்த 5,000,000 ரூபா, 2008 ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டிகளுக்காக கிடைத்த 5,200,000 ரூபா நிதிகளில் இருந்தே இந்த மோசடிகள் இடம்பெற்றள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
