தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான 20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதாக கூறப்படும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
தேர்தல்கள் சட்டமூலம், அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டபோது, சிறுகட்சிகள் இணைந்து இது குறித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தோம்.
இது குறித்து இன்னும் ஆராயப்பட வேண்டும். அவசரப்பட்டு கொண்டுவர அனுமதிக்க முடியாது எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
