GuidePedia

கிளிநொச்சியில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவர் மக்களை வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு அச்சுறுத்துவதாகவும் அதனை பொலிசார் கண்டும் காணாமல் இருப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கண்டாவளை புன்னைநீராவி பாடசாலை வாக்களிப்பு நிலையத்துக்கு முன்பாக 50 மீற்றர் இடைவெளியில் தம்பிராசபுரம், உழவனூர், புன்னைநீராவி சமுர்த்தி உத்தியோகத்தர் சிவகுமார் தனது ஆதரவாளர்களோடு நின்று கொண்டு அங்கு வாக்களிக்க செல்லும் மக்களை மிரட்டுகின்ற பாணியில் தேர்தலில் வெற்றிலைக்கு வாக்களியுங்கள் என மிகத்துணிச்சலாக அதிகாரத்தோடு மக்களை மிரட்டி வருவதோடு அங்கு செல்லும் மக்களுக்கு மதுபானத்தைக்கூட வழங்கி வருகின்றார்.
நீதியாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற வேண்டும் என தேர்தல் ஆணையாளர் கடுமையான உத்தரவுகனை விதித்தும் கூட தேர்தல் கடமைகளில் நிற்கும் பொலிசாரின் கண்களுக்கும் அவர் தெரியவில்லை.
இதைவிட தேர்தல்களை கண்காணிக்கும் அமைப்புக்களுக்கும் இவரின் செயல்கள் தெரியவில்லை.
அரச உத்தியோகத்தராக இருந்து கொண்டு ஈபிடிபியின் பின்னால் திரிந்து மக்களை மிரட்டி சுதந்திரமாக வாக்களிக்கக்கூட மக்களை விடாத சமுர்த்தி உத்தியோகத்தரின் செயலால் மக்கள் விசனம் அடைந்துள்ளனர்.



 
Top