GuidePedia

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் வீட்டின் மீது, கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பலாங்கொடை பிரதேசத்தில் அமைந்துள்ள சஜினின் வீட்டின் மீது, நேற்று இரவு இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் அதில் ஒன்று வெடித்துள்ளது. எனினும் பாரியளவு சேதமேற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இத்தாக்குதல் நடத்தியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணிலிடம், சஜின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, சஜின் வாஸ் குணவர்தனவை ஜனாதிபதி மைத்திரியின் புதிய அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள வேண்டாமென கோரி, பம்பலப்பிட்டியில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



 
Top