வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தியாவட்டவான், தாண்டியடி என்ற இடத்தில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகினார். மேலும் இருவர் காயமடைந்தனர்.
ஆலங்குளத்தை சேர்ந்த வினோதா சிவலிங்கம் (வயது 18) என்பவரே ஸ்தலத்திலேயே பலியாகினார்.
காயமடைந்த ஏனைய இருவரும் சிகிச்சைக்காக, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் தொய்வு நோய் கிளினிக்கிற்காக, முச்சக்கர வண்டியில் ஆலங்குளத்திலிருந்து வைத்தியசாலை நோக்கி செல்லும் வழியில், தாய் (சின்னய்யா நல்லம்மா - வயது 50) , மகள் (வினோதா சிவலிங்கம் -வயது 18) ஆகியோர். பயணித்துள்ளனர்.
சென்றுகொண்டிருக்கையில், தாண்டியடி பகுதியில் ஓட்டமாவடியில் இருந்து வந்த டிப்பர் லொறி ஒன்று திடீரென திருப்பிய போது, தான் செய்வதறியாது தடுமாறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மத்துகமையை சேர்ந்த லொறி ஒன்றுடன் மோதியதாலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக முச்சக்கரவண்டி சாரதி இக்பால் கூறினார்.
இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த மகளான விநோதா ஜ்தலத்திலேய பலியானார். தாய் காயத்திற்குள்ளானார்.
விபத்து இடம்பெற்ற பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாரதிக்கு சிறிது நேரத்தின் பின் நினைவு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி திப்புட்டுமுனி உட்பட ஏனைய பொலிஸாரும் விபத்து நடந்த ஸ்தலத்தை உடனடியாக பார்வையிட்டனர்.
மரணமடைந்த விநோதாவின் பிரேதம் தற்போது வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.