(றிப்கான் கே சமான்)
முஸ்லிம் சமய விவகாரா மற்றும் தபால் சேவைகள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்ற கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், தேக ஆரோக்கியத்தையும் வல்லவன் அல்லாஹ் வழங்க வேண்டுமென பிரார்த்தனை செய்வதோடு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில்:- இதுவரை காலமும் ஒவ்வெரு மதத்திற்கும் தனித்தனியான அமைச்சுக்கள் காணப்படவில்லை எனவே மதங்களுக்கான தனியான அமைச்சு வழங்கப்படவேண்டுமென கடந்த 2014.11.19ம் திகதி பாராளுமன்றத்தின் கவனத்திற்கு சமர்ப்பித்தவன் நான் என்ற வகையில் இன்று அவ்வாறு அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதையிட்டு நான் பெருமிதம் அடைவதோடு பொதுநலம், சமூக சிந்தனையும் கொண்ட நண்பர் கௌரவ ஹலீம் அவர்களோடு இணைந்து எதிர்காலத்தில் எமது மஸ்ஜித்கள் மற்றும் இதர கலாச்சார விடயங்கள் தொடர்பாகவும் கவணமெடுத்து பணியாற்ற தயாராக உள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.