GuidePedia

(எஸ்.அஷ்ரப்கான்)

மிக நீண்டகாலம் ஐக்கிய தேசியக்கட்சியின் கொள்கை வளர்ச்சிக்காக உழைத்த தற்போதைய நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அனோமா கமகே அவர்களுக்கு கல்முனை வாழ் மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் கல்முனை முஸ்லிம் பிரிவு அமைப்பாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் வேட்பாளருமான எஸ்.எல்.எஸ். முஹீஸ் தெரிவித்தார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடும்போது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியில் வடக்கு கிழக்கு மக்களின் பங்கு அளப்பெரியது. அதிலும் குறிப்பாக அம்பாரை மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அதிகளவான மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். இதற்காக கட்சியின் இப்பிரதேச அமைப்பாளர் என்றவகையில் நான் பெருமிதமடைவதோடு,கல்முனை பிரதேச மக்களுக்கும், நண்பர்கள் என்னோடு கைகோர்த்து உதவிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
தென் கிழக்கின் வர்த்தக கேந்திர மையமாகத் திகழும் கல்முனை மாநகரம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டான பிரதேசமாகும். இங்குள்ள மக்கள் ஜனநாயக போராட்டத்தில் முழு இலங்கை மக்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டான செய்தியை நடந்த ஜனாதிபதித் தேர்தல் மூலம் நாட்டுக்கு சொல்லியிருக்கின்றார்கள்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே அம்பாரை மாவட்டத்திலுள்ள மூவின மக்களுக்கும் சிறந்த சேவை செய்து வருகின்ற ஒருவராகும். இவரது பணியில் தன்னையும் இணைத்துக்கொண்டுள்ள பிரதி அமைச்சர் அனோமா கமகே அவர்கள் மக்களுக்கு சிறந்த சேவையின வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. கல்முனை பிரதேச மக்களுக்கும் பல்வேறு உதவிகளை அவரால் செய்யப்பட முயற்சிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும். அதற்காக எமது மக்கள் ஜனநாயக ஆட்சிக்கும் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகளுக்கும் என்றும் விசுவாசமாக இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.



 
Top