GuidePedia

(எம்.எம்.ஜபீர்)
பாதிக்கப்பட்ட நமது சமூகத்தின் கண்ணீர்ப் பிராத்தினைகளை அங்கீகரித்த எல்லாம்  வல்ல இறைவனுக்கு ஷூகூர் செய்வோமாக! 

சரியான முடிவை சரியான நேரத்தில் வெகு துல்லியமாய்க் கணித்தெடுத்து, அதனைப் பொருத்தமான பொழுதில் பிரகடணம் செய்த நமது தேசியத் தலைமை ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதானத்தையும் கம்பீரத்தையும் அனுசரித்து தiமையின் வழிகாட்டுதலை வழி மொழிந்த நமது மண்ணின் மாற்றத்தின் பங்காளிகள் சம்மாந்துறை மக்கள் மற்றும் அனைத்து முஸ்லிம்கள்  அனைவருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதி உயர்பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர்  உள்ளங்கனிந்த வாழ்த்துக்களும், நன்றிகளும் உரித்தாகட்டும். என தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, 

முஸ்லிம் சமூகத்தின் ஒட்டு மொத்த தன்மானத்தையும் தனது சதுங்க விளையாட்டின் பகடைக் காய்களாகப் பாவித்த அராஜக அரசின் வக்காலத்துக்களான நமது கூள் முட்டைத் தலைமைகள், கடைசி நேரம் வரைக்கும் இந்த சமூகத்தை ஏமாற்றும் கைங்கரியத்தில் ஈடுபட்டமை நமது சமூகத்திற்கும் நமது மண்ணிற்கும் மாபெரும் தலைகுனிவே.
அத்தகு தரகுத் தலைமைகளை சம்பூரணமாக நிராகரித்து நமது ஊருக்கான கௌரவமான பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்கான நமது தலைமையின் சாணக்கிய வியூகத்தையும் எதிர்காலத்தில் வெகு நிதானமாக அனுசரித்து அடுத்த வெற்றியின் பங்காளிகளாகவும் நம்மை நாம் கண்டுகொள்ள எமது மண்ணின் மக்களாகிய நாம் கண்டுகொள்ள இந்த மண்ணின் மக்களாகிய நாம் அனைவரும் நம்முடைய மனச்சாட்சியுடன் பிரதிக்ஞை செய்து கொள்வோம்.


உங்கள் சேவையிலுள்ள,


ஐ.எல்.எம்.மாஹிர்
அதி உயர்பீட உறுப்பினர் 
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்



 
Top