GuidePedia

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலானஇந்த கட்சியும் இந்த அரசும் தற்போது சத்தியப்பிரமாணம் செய்திருப்பது 96 நாட்களுக்கு மட்டும்தான்’ என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

14-01-2014 இன்று புதன்கிழமை காத்தான்குடியில் நடாத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்,
‘எப்படி 23ம் திகதி பாராளுமனறம் கலைக்கப்பட்டு, புதிய ஆட்சி, புதிய நிருவாகம் வருகின்ற பொழுது யார் ஆகக்கூடிய ஆசனங்களை பெறுகின்றார்களோ அவர்கள்தான் இந்த நாட்டின் பிரதமராக வருவார்கள். இன்று நினைத்தாலும் நாங்கள் இந்த நாட்டின் பிரதமராக வர முடியும். நாளை நாங்கள் நிமல் சிரிபால டி சில்வாவை பிரதமராக்கி அமைச்சரவையை பெற முடியும். 135 ஆசனங்கள் இருக்கின்றது.

ஆட்சி அமைப்பதற்கு 113 ஆசனம் போதும். ஆட்சி அமைப்பதற்கு ஒரு பிரச்சினையும் கிடையாது. ஆனால் இன்று இருக்கின்ற பிரச்சினை என்னவென்றால் நாங்களோ அல்லது ஜனாதிபதியோ48 கட்சிகளை கொண்ட கட்சியோ குற்றம் சொல்லும் இவர்கள், இந்த 100 நாள் வேலைத் திட்டத்தை செய்வதற்கு விடுகின்றார்கள் இல்லை.
ஏனென்றால் மக்களுக்கு கிட்டத்தட்ட 50 சலுகைகள் தருவதாக சொல்லி இருக்கின்றது.
இது தொடர்பில் கிட்டத்தட்ட நாங்கள் கணக்கு பார்த்தோம். 4 பில்லியன் டொலர் தேவை. வீரகேசரி பத்திரிகையில் வந்த செய்தியொன்று மைத்திரி அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள 100 நலன் சார் வேலைத் திட்டங்கள் செய்வதற்கு பணம் தேவை.
இந்ந பணம் எங்கு இருந்து வரப்போகின்றது. பணம் அச்சடிக்க முடியாது. அச்சடித்தால் நாட்டில் பண வீகக்கம் ஏற்படும். என்ன நடக்கப்போகின்றது என்று நாங்கள் பார்க்க வேண்டும். அது எங்களுக்கு தெரியாது.

மைத்திரி அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள 100 நலன் சார் வேலைத் திட்டங்களை செய்வதற்கு 1 வருடத்திற்கு 4 பில்லியன் டொலர் தேவை. இதற்கு உலகத்தில் எந்த அரசும், எந்த நாடும் கடண் கொடுக்கப் போவதில்லை. அமெரிக்காவிடமும் பணம் இல்லை. எல்லா நாடுகளும் பொருளாதார கஷ்டத்தில் இருக்கின்ற கட்டம்.
ஆகவே நாங்கள் பார்க்க வேண்டும். எங்கிருந்து இந்தப் பணம் வரப் போகின்றது. இதற்கு இலங்கை நாட்டின் திரைசேரிதான் ஒத்துக்கொள்ள வேண்டும். எந்த வங்கியும் அந்த அந்த தினத்தில் செலவளிப்பதற்கு கடண் வழங்குவதில்லை.

கடை கட்ட, கடண் கொடுக்கும் வியாபாரம் செய்ய, கடண் கொடுக்கும் அந்த அந்த தினத்தில் வீட்டில் உணவு உன்பதற்கு யாரும் கடன் கொடுப்பதில்லை.

ஆசிய வங்கியோ, சீனாவோ கடன் கொடுக்கும் எந்த வங்கியோ கடன் கொடுக்கும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு இது மக்களுக்கு 80 ரூபாவுடைய பெற்றோளை 50 ரூபாவுக்கு கொடுப்பதற்கு உலகில் யாரும் கடன் கொடுக்கப் போவதில்லை.
ஆகவே நாங்கள் பார்க்க வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினவை பார்க்க வேண்டும். அதனால்தான் இந்த திட்டத்தை வரவேற்கின்றாம். அதற்காகத்தான் இந்த திட்டத்திற்கு ஆதரவு அளிக்கின்றோம்.

ஆகவே ஜனாதிபதி இந்த திட்டத்தை எவ்வாறு செய்யப்போகின்றார். எங்கிருந்து நிதி வரப் போகின்றது. இலங்கை திரைசேரியின் நிலபரம் எங்களுக்கு தெரியும். நாங்கள் எல்லாவற்றையும் பார்ப்போம். நாங்கள் இன்றைக்கு ஆட்சி எடுத்தால் சொல்லுவாறு, இந்த திட்டங்களை செவ்வதற்கு இந்த அரசாங்கம் விடுவதில்லை.
இன்றைக்கு இந்த உலகத்திலேயே 135 ஆசனங்கள் இருக்கத்தக்க எதிர்கட்சியில் இருக்கின்ற 85 ஆசனங்களை வைத்துக்கொண்டு ஆட்சி அமைத்து இருக்கின்ற அரசாங்கம் இதுதான்.

உலகத்தில் எங்கும் சிறுபான்மை கட்சிகள் ஆட்சி அமைப்பது கிடையாது. 85 ஆசனங்களை கொண்டு பாராளுமன்றத்தில் ஆட்சி அமைத்து இருக்கின்றார்கள். நாங்கள் 135 ஆசனங்களை வைத்துக் கொண்டு பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

ஆகவே, ஆட்சி சரியாக நடக்குமாக இருந்தால், இந்த வேலைத்திட்டங்கள் போகுமாக இருந்தால் தொடர்ந்து ஆதரவளிப்போம். 30 நாள் அல்லது 40 நாளில் வேலை நடக்க வில்லை என்றால் அடுத்த தினத்திற்குள் நாங்கள் ஆட்சி அமைப்போம். எங்களிடம் 135 ஆசனம் இருக்கின்றது.

உடனடியாக நாங்கள் ஒருவரை பிரதமராக ஆக்குவோம். உடனடியாக அமைச்சர்களை நியமிப்போம். இன்றைக்கு நாங்கள்தான் ஆட்சி  கொடுத்து விட்டு இருக்கின்றாம். என்ன செய்கின்றார்கள் என்று பார்ப்பதற்காக குறைவான ஆக்களிடம் நாங்கள் பர்ப்போம்.

அவர்கள் மக்களின் நலன் திட்ங்களை செய்கின்றார்களா என்று பாரக்க வேண்டும். அத்தோடு இந்த 100 நாள் திட்டங்களை மக்களுக்கு எப்படி செய்கின்றார்கள், எவ்வாறு செய்கின்றார்கள் என்று பார்த்துவிட்டு நாங்கள் தீர்மானத்துக்கு வரலாம். இப்போது அவசரப்பட கூடாது என்பதுதான் எங்களுடைய அபிப்பிராயமும் நாங்கள் சார்ந்து இருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அபிப்பிராயமும் அதுதான்.

ஆகவே நாங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவளித்துக்கொண்டு வெளியில் இருப்பதுதான் எங்களுடைய நோக்கம் என்று கூறினார்.

ஊடகவியாலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலலித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் இப்போதும் நான் ஆட்சியில்தான் இருக்கின்றேன். இந்த அரசாங்கதில்தான் இருக்கின்றேன். மறைந்த தலைவர் மரஹ_ம் அஷ்ரப் எப்போதும் சொல்லுவார், நாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டுமென்று. இப்போதும் நான் சொல்லுகின்றேன் ஆட்சியில்தான் இருக்கின்றேன். இந்த அரசாங்கத்தோடுதான் இருக்கின்றோம். அரசாங்கத்தில் இருக்க வேண்டுமென்றால் அமைச்சர் பதவியில் இருக்க வேண்டுமென்று கட்டாயம் இல்லை.

அமைச்சர் இல்லாமலும் அரசாங்கத்தில் இருக்க முடியும் தானே. நான் அரசாங்கத்தோடு இருக்கின்றேன். மிக நெருக்கமாக, ஜனாதிபதியோடு மிக நேருக்கமாக இருக்கின்றோம். எந்த விதமான பிரச்சினையும் கிடையாது நான் என்ன வெனுமென்றாலும் செய்து கொண்டு போகலாம் எனக்கு ஆட்சி என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னோடு மிக நேருக்கமாக சந்திரிக்கா பண்டார நாயக்க, அமைச்சர் மங்கள சமரவீர எல்லோரும் ஆட்சியில் இருக்கின்றார்கள்.

நாங்களும் ஆட்சியில்தான் இருக்கின்றோம். எந்த விதமான பிரச்சினையும் கிடையாது ஆட்சி என்றால் அமைச்சராக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. அமைச்சர் இல்லாமல் அதிகாரம் கூட இருக்கின்றது.

ஆனால் சில நேரங்களில் ஆட்சிக்கு உல்லே போய் ஆட்சியாளர்களாக அமைச்சர்களாக இருக்கின்ற சில விடயங்கள் சமூகத்திற்கு எடுக்க முடியாமல் போகிவிடும். ஆனால் இது 96 நாள் வேலைத்திட்டம். ஆகவே நானும் அரசாங்கம்தான் நானும் மைத்திரி பால சிறிசேனவின் ஆட்சியில்தான் இருக்கின்றேன் என்னுடைய ஊரில் வந்தால் வார கிழமை வார நேரம் முழு ஆதவை கொடுப்பேன்.

எனது கையை உயர்தி எதிர்கட்சி மாதிரி எதிற்க்க மாட்டேன். மிகத் தெளிவாக சொல்ல விரும்புகின்றேன். அடுத்த 29ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் பஜ்ஜெட்டை கொண்டுவரும் பொழுது உடனடியாக முதலாவது எனது கையை உயர்தி  பஜ்ஜெட்டுக்கு ஆதரவளிப்பேன்.
ஆகவே நான் ஆட்சியில்தான்  இருக்கின்றேன் என்று மேலும் தெரிவித்தார் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்.



 
Top