(க.கிஷாந்தன்)
நுவரெலியா மாவட்டம் ஹோல்புரூக் கோட்டத்தில் அமைந்துள்ள மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பண பொதுக் கூட்டம் எதிர்வரும் 17ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
பாடசாலையின் அதிபர் எம்.முத்துகுமார் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் காலை 10 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
பழைய மாணவர் சங்கத்திற்கான நிர்வாகக்குழு இதன்போது தெரிவு செய்யப்படவுள்ளதுடன் பழைய மாணவர் சங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் தெளிவுபடுத்தப்படவுள்ளது.
இக்கூட்டத்தில் மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற அனைத்து பழைய மாணவர்கள், பெற்றோர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்ää ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழு சார்பில் அழைப்பு விடுக்கப்படுகிறது.