GuidePedia

(எஸ்.அஷ்ரப்கான்)
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சிமாற்றத்திற்காக வாக்களித்த மக்களுள் கல்முனைத் தொகுதி மக்கள் தனி இடத்தை பிடித்திருக்கின்றார்கள். இதன் மூலம் இந்நாட்டு முஸ்லிம்கள் ஜனாதிபதிக்கும், இனிவரும் ஆட்சியாளர்களுக்கும் சிறுபான்மைகளின் சிறந்த செய்தியை சொல்லியிருக்கின்றார்கள் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயா கமகேயின் தனிப்பட்ட இணைப்பாளர் ஏ.எச்.சிறாஜ் தெரிவித்தார்.  

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதித் தேர்தலில் நாட்டினுடைய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அவர்கள் மக்களுடைய ஆணை மூலமாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதற்கு காரண கர்த்தாவாக இருந்த இந்நாட்டு மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

பேரினவாத கடும்போக்காளர்களின் செயற்பாட்டுக்கு போசனையிட்டு,ஊக்கப்படுத்தி, சிறுபான்மை மக்களின் உள்ளங்களை வேதனை செய்து, ஜனநாயக போர்வையால் மேற்கொள்ளப்பட்ட சர்வதிகார ஆட்சி 2015ஆம் ஆண்டில் நிறைவுக்கு வந்துள்ளது.

சிறுபான்மை மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் புறக்கணித்துää கடும்போக்காளர்களின் நெருக்குவாரங்களுக்கு முடிவு கட்டாமல் அவர்களை சுதந்திரமாக உலாவுவதற்கும் சட்டத்தைக் கையில் எடுத்துச் செயற்படுவதற்கும்  சுதந்திரம் வழங்கி விட்டு அவர்களைக் கொண்டு பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் மாத்திரம் ஆட்சி பீடம் ஏற முடியுமென்;ற மமதையில் மிதந்த  மகிந்த ராஜபக்ஷவின் 3வது தடவை ஆட்சிக்கனவு கலைந்து விட்டது.

ஆக,இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முன்னிட்டு உழைத்த பெரும்பான்மை மக்களோடு கைகோர்த்து நின்ற சிறுபான்மை மக்கள் மகிந்த ராஜபக்ஷ அரசுக்கு நல்லதொரு வரலாற்றுப்பாடத்தைப் புகட்டியுள்ளதோடு. ஜனாதிபதி வேட்பாளர் மேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களின் பெரு வெற்றி சிறுபான்மை மக்களுக்குக் கிடைத்த வரலாற்று வெற்றியாகும்
இந்த வெற்றியின் பங்குதாரர்களான  சிறுபான்மை மக்களுக்கான உரிமைகள், அபிலாசைகளை உணர்ந்த ஒரு தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் செயற்பட வேண்டும் என்பதுடன்,எதிர்கால அரசியல் தலைவர்களும் இதனை உணர்ந்து சிறுபான்மைகளை பாதுகாக்கின்ற தலைவர்களாக மாற வேண்டும். என்றும் குறிப்பிட்டுள்ளார்.



 
Top