ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான், பண்டாரவளை பொலிஸில் இன்று திங்கட்கிழமை காலை சரணடைந்துள்ளார்.
பதுளை எல்ல பிரதேசத்தில் கடந்த 3ஆம் திகதி, ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகித்துக் கொண்டிருந்த தபால் ஊழியரை தாக்கியதாக, இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
எனினும் இக்குற்றச்சாட்டை செந்தில் தொண்டான் மறுத்து வந்தார்.
இவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு தபால் ஊழியர்கள் மற்றும் பிரதேசத்தின் பொது மக்களால் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதனையடுத்து, கடந்த 5ஆம் திகதி செந்தில் தொண்டமானுக்கெதிராக பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், அவர் இன்று பொலிஸில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
