GuidePedia

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் அலரி மாளிகையை விட்டு வெளியேற முன்னதாக, தனது இரண்டாவது மகன் யோசித ராஜபக்சவை இலங்கை கடற்படையை விட்டு விலக அனுமதிக்கும் ஆவணங்களில் ஒப்பமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
2006ம் ஆண்டு சிறிலங்கா கடற்படையில் இணைந்து கொண்ட யோசித ராஜபக்ச, கடைசியாக லெப்டினன்ட் தர அதிகாரியாகப் பணியாற்றியிருந்தார்.
அவர் சிறிலங்கா கடற்படையின் ரகர் அணியின் தலைவராகவும் இருந்தவர்.
அதிபர் தேர்தலில் தாம் தோல்வி கண்டதும், தனது மகன் யோசித ராஜபக்சவைத் தொடர்ந்து கடற்படையில் இருப்பதை அனுமதிக்க விரும்பாத மகிநத ராஜபக்ச அவரை பதவியில் இருந்து நீங்குவதற்கான அனுமதி ஆவணத்தில் ஒப்பமிட்டுள்ளார்.
யோசித ராஜபக்ச கடற்டையில் ஒரு லெப்டினன்ட் தர அதிகாரியாகப் பணியாற்றிய போதிலும், அவருக்கு அங்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன.
அத்துடன் கடற்படை விதிகளுக்குக் கட்டுப்படும் அதிகாரியாக இருக்காமல், ஜனாதிபதியின் மகனாகவே நடந்து கொண்டவர்.
அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தில், தான் பதவியில் இருந்து நீங்க முன்னதாக, தனது மகனை கடற்படையில் இருந்து விலக்கும் ஆணையில் ஒப்பமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



 
Top