GuidePedia

(க.கிஷாந்தன்)
அட்டன் டிக்கோயா நகர சபையில் பணிப்புரியும் மூன்று ஊழியர்கள் தன்னுடைய அனுமதி இல்லாமல் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் படங்களை நகரசபை சுவர்களில் ஒட்டியுள்ளதாக கூறி 10.01.2015 அன்று மாலை அட்டன் பொலிஸாருக்கு நகர சபை தலைவர் அழகமுத்து நந்தகுமாரினால் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த முறைபாட்டின் படி அட்டன் பொலிஸார் விசாரணைகள் மேற்கொள்வதோடு நகர சபைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
இந்த நகர சபையில் பல அரசியல்வாதிகளின் கட் அவுட்கள் நகரசபையில் ஒட்டியிருந்ததாக அட்டன் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.








 
Top