GuidePedia

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

உல்லாசப் பயணத்துறை விளையாட்டு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த எம்.ஐ.எம்.றபீக்கும் முஸ்லிம் சமய தபால் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏறாவூரைச் சேர்ந்த அப்துல் மஜீட்டுக்கும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

காத்தான்குடி பிரதேசத்தினுடைய முதலாவது செயலாளராக இலங்கை நிருவாக சேவையில் உயர் பதவியை பெற்றுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த எம்.ஐ.எம்.றபீக் என்பவர் அதிமேதகு ஜனாதிபதி மைத்தரி பால சிறிசேனவினால் உல்லாசப் பயணத்துறை விளையாட்டு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் பல ஆண்டுகளாக பல்வேறுபட்ட அமைச்சுக்களின் மேலதிக செயலாளராக,பணிப்பாளராக இருந்து மிக சிறப்பாக செயற்பட்டு திறமை பெற்றவர்.

இவர் புதிய அரசாங்கத்தில் இந்த அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து நான் மிகவும் பெருமை அடைகின்றேன்.

அவருக்கு எனது வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
அதே போன்று ஏறாவூரைச் சேர்ந்த முதலாவது ஒருவர் இவ்வாறு இலங்கை நிருவாக சேவையின் ஆகக் கூடிய உயர் தரமான அமைச்சினுடைய செயலாளர் பதவிக்கு ஏறாவூரைச் சேர்ந்த அப்துல் மஜீத் முஸ்லிம் சமய தபால் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இவரும் மிக நீண்ட நாட்களாக அமைச்சுக்களின் பணிப்பாளராக,மேலதிக செயலாளராக கடடையாற்றி பல்வேறுபட்ட அனுபவங்களை கொண்ட ஒருவர்.

ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பேர் அமைச்சுக்களின் செயலாளாராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் எனது பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு மேலும் மேலும் அவர்கள் இருவரும்; முன்னேற்றமடைந்து மிகச் சிறப்பான பணியை தனது அமைச்சின் ஊடாக இந்த நாட்டுக்கு ஆற்ற வேண்டுமென்றும், தேக ஆரோக்கியத்தோடு நீண்ட நாட்கள் நீண்ட ஆயுலோடு வாழவேண்டுமென்றும் வல்ல (அல்லாஹ்விடம்) இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன் என்றும மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 
Top