பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் அருட்தந்தையின் இலங்கைக்கான விஜயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மடு விஜயம் இன்று (14) பிற்பகல் 02.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
மடுவுக்கான அருட்தந்தையின் விஜயத்தினை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அப்புனித வழிபாடுகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனை முன்னிட்டு நேற்று (13) முதல் இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாணத்திலுள்ள சகல சாலைகளிலிருந்தும் மடுவுக்கான விசேட பஸ் சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய முகாமையாளர் எஸ்.ஏ.அஸர் அறிவித்துள்ளார்.
இவ்விசேட ஆராதனைகளில் கலந்துகொள்ளவுள்ள மக்களின் நலன்கருதியே இந்த பஸ் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.