ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தங்காலை பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை 3.30 அளவில் முறைப்பாடு செய்துள்ளார்.
தங்காலை பொலிஸ் நிலைய பேச்சாளர் ஒருவரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் இந்த முறைப்பாட்டு தகவலை உறுதி செய்துள்ளனர்.
தொலைபேசி ஊடாக தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக நாமல் ராஜபக்ஷ தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.