(க.கிஷாந்தன்)
மலையகத்தில் மலையக மக்கள் 15.01.2015 அன்று தைப்பொங்கலை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றார்கள். தை பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தேவையான அரிசி, சக்கரை, பயறு, தேங்காய், பழங்கள் உட்பட பல அத்தியவசியான பொருட்களை மலையகத்தில் பிரதான நகரங்களில் 14.01.2015 அன்று மக்கள் மிக ஆர்வத்துடன் வாங்கி வந்தார்கள்.
அதேபோல் மலையகத்தில் மார்கழி பஜனை வழிபாடு தொடர்ந்து இடம்பெற்று 14.01.2015 அன்று விசேட வழிபாட்டுடன் சப்பரம் எடுக்கப்பட்டு தோட்டப்புறங்களில் வலம் வந்தது. இதன்போது அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அத்தோடு 15.01.2015 அன்று சூரியபொங்களும் 16.01.2015 இன்று மாட்டு பொங்களும் கொண்டாடப்படவிருக்கின்றது. 15.01.2015 அன்று பிரதான தைபொங்கல் வழிபாடு அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
அதன்பின் பிரதான தைபொங்கல் நிகழ்வு அட்டன் டீ.கே.டபிள்ய10 மண்டபத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் துறைமுக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடதக்கது.