பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கால்டன் விளையாட்டு நிறுவனத்திற்குச் சொந்தமான பல கோடி ரூபாக்கள் பெறுமதியான உபகரணங்கள் பல பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளன. குறித்த பொருட்கள் நுகேகொடை,யுபிலிகனுவ மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் செயலகத்திற்குரிய அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பெருந்தொகையான தொலைக்காட்சித் திரைகள், ஒலி,ஒளி அமைப்புக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் பதுக்கி வைத்திருந்த பொருட்களை தமது கட்டுபாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
சம்பவத்தினையடுத்து நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய இரத்தின தேரர் குறித்த பகுதிக்கு வருகை தந்து நிலைமைகள் குறித்து கண்டிறிந்து கொண்டனர்.