GuidePedia

ஊழல் மோசடியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் ஆளும்-எதிர்க்கட்சி பேதமின்றி அவர்களுக்கெதிராக முறைப்பாடு செய்யப்படுமென, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடி தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென்ற பீதியில் பல அரசியல்வாதிகள் தற்போது அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதாக தெரிவித்த அனுரகுமார, கடந்த ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக தகவல் திரட்டப்படுவதாகவும், அவர்களுக்கெதிராக முறைப்பாடு செய்யப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மக்களின் சொத்துக்களை அபகரித்து கோடீஸ்வரர்களாகியுள்ள அரசியல்வாதிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டு, அவை மக்கள் நலனுக்காக பயன்படுத்தப்படுமென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



 
Top