இலங்கையில் இன்று நடைபெறும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கான வருகை தந்துள்ள ஆசிய கண்காணிப்பாளர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை மட்டும் நேற்று கண்காணிப்புக்குழு பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
பெப்ரல் தேர்தல் கண்காணிப்பு குழுவினால் ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கண்காணிப்பாளர்கள் சந்திக்காமை குறித்து ஆளும் கட்சியினர் சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர்.
அனைத்து வேட்பாளர்களையும் கண்காணிப்புக்குழு பிரதிநிதிகள் சந்தித்திருக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வேட்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ஆசிய தேர்தல் கண்காணிப்புக் குழு சந்தித்துள்ளதாகவும் இந்த சந்திப்புக்களில் பெப்ரல் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை எனவும் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
