நாட்டில் மாடுகள் வெட்டப்படுகின்றமை மற்றும் நாட்டு மக்களை பால் மாபியாவிலிருந்து பாதுகாக்கின்ற செயற்பாடுகள் மைத்திரி யுகத்தில் நடைபெறும் என ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
வெட்டுவதற்கு வைத்திருந்த 108 மாடுகளை மீட்டு அவற்றை உரிமையாளர்களுக்கு வழங்கும் நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வு நேற்று அம்பலாந்தோட்டையில் இடம்பெற்றது. இதன்போது பால் இறக்குமதியை நிறுத்துவதற்கும் தாம் நடவடிக்கை எடுக்க எதிர்ப்பார்ப்பதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.