GuidePedia

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனும் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளனர்.
இதன்போது இலங்கையில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன், அபிவிருத்தி திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னரான 100 நாள் வேலைத் திட்டம் குறித்து பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உரையாடியுள்ளார்.
மேலும் இலங்கையின் முன்னேற்ற முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என பான் கீ மூன் இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள பான் கீ மூன் அங்கிருந்து இலங்கை ஜனாதிபதி மைத்திரியை தொலைபேசியில் அழைத்து பேசியதாக ஐநா செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.



 
Top