(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் காத்தான்குடி 01ம் குறிச்சி மற்றும் 19ம் வட்டாரத்தை சேர்ந்த சுமார் 800 மாணவர்களுக்கான இலவச அப்பியாச கொப்பி வழங்கும் நிகழ்வும் “ஹ_சைனியா ஹிட்ஸ் கொலேஜ்” மாணவர்களுக்கான பாடசாலை பை விநியோக நிகழ்வும் அண்மையில் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணி காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன் போது அதிதிகளினால் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பி மற்றும் பாடசாலை பை வழங்கிவைக்கப்பட்டது.
இதற்க்கான நிதியுதவியினை Nurambek “Citizens Help People in Sri Lanka Friendship Association” நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.