(பழுலுல்லாஹ் பர்ஹான்)
‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தோடு தான் இணையவில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
தான் ‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்துள்ளதாக சில இணையத்தளங்கள் மற்றும் குறுஞ்ச் செய்தி சேவைகளில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்
‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் -100 நாள் வேலைத் திட்டத்திலுள்ள மக்களின் நலன் சார் வேலைத் திட்டங்களை செய்வதற்கும் அடுத்த 29ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் கொண்டுவருகின்ற வரவு செலவு திட்த்திற்கும் மாத்திரிம் தான் ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.