GuidePedia

நீதியை காபிரான (இறை நிராகரிப்பினுடைய) நாடு நிலை நாட்டினாலும் அதை அல்லாஹ் நீடிக்க வைப்பான். அநீதியை முஸ்லிம் நாடு செய்தாலும் அவ் ஆட்சியை அவன் நீடிக்கச்செய்வதில்லை. 

(ஷைகுல் இஸ்லாம் இப்னுதைமியா)

நடந்து முடித்த இத்தேர்தல் முன்னால் ஜனாதிபதி மஹிந்தவிற்கும் இன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்குமாக இருந்தாலும் இதை இன்னுமொரு வார்த்தையில் சொல்வதாக இருந்தால் நியாயத்திற்கும் அநியாயத்திற்குமிடையிலான போட்டியென்றோ அல்லது முஸ்லிம்களுக்கும் பொதுபலசேனாவிற்குமத்தியில் நடந்த வாக்கெடுப்பு யுத்தம் என்றோ சொல்லலாம். அல் ஹம்துலில்லாஹ்.

 அல்லாஹ்வின் மிகப்பெரும் கருணையால் இப்போட்டியில் நாம் வெற்றிபெற்றுவிட்டோம். வென்றது மைத்திரியாக இருக்கலாம் ஆனால் ஈமான் கடுகளவு இருக்கின்ற முஃமின் கூட சந்தோசப்படுகின்ற வெற்றியாகும். இவ்வாறான வெற்றிகள் முஸ்லிம் அல்லாதவர்களுடையதாக இருந்தாலும் முஃமின்களின் வெற்றி என்ற கருத்தை திருமறைக்குர்ஆனின் பின்வரும் வசனங்கள் குறிப்பிடுகின்றன.

ரோம் தோல்வியடைந்து விட்டது. அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள். சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும்ää (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்வடைவார்கள். அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் - மேலு, (யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன். (30:2-30:5)

     ரோமர்களும் பாரசீகர்களும் காபிர்களாக இருந்தாலும் ரோமர்களுக்கு கிடைக்க இருக்கின்ற வெற்றியை அல்லாஹ்வின் வெற்றி என்றும் முஃமின்கள் சந்தோசப்படுகின்ற வெற்றி என்றும் (காபிராக இருந்தும் கூட) குறிப்பிடுகின்றான்.

மஹிந்தவின் வெற்றியின் மூலம் முஸ்லிம்களுக்கு தங்களால் இயன்ற வழிகெலல்லாம் நோவினை செய்து வந்த பொதுபலசேனா அமைப்பு மகிழ்ச்சி வெள்ளத்தில் குதிக்க இருந்ததைப்போன்று பாரசீகத்தின் வெற்றியின் மூலம் மக்காவில் முஸ்லிம்களுக்கு நோவினை செய்து வந்த மு~;ரிகுகள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதனால்தான் இறைவன் முஃமின்கள் சந்தோசப்படுகின்ற வகையில் ரோமர்கள் வெற்றி பெருவார்கள் என்ற நன்மாறாயத்தை குறிப்பிடுகின்றான். அந் நாளில், நாம் தற்போது சந்தோசப்படுவது போன்று முஃமின்கள் சந்தோசப்படுவார்கள் என்றும் குறிப்pடுகின்றான். அதே நேரம் அவர்கள் வேதக்காரர்களாக இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே, மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கின்ற ஒவ்வொரு முஃமினுக்கும் இது ஒரு நன்மாராயமாகும். இ;வ்வேளையில் எம்மைப்போன்று அல்லது அதைவிட கொடுமையான முறையில் அநீதி இழைக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்ற எம் ஈமானிய உறவுகளான மியன்மார் மற்றும் பாலஸ்தீன், சிறியா முஸ்லிம்களையும் நாம் மறந்து விடக்கூடாது. துஆ என்பதும் இறைவனிடத்தில் தனிமையிலே அழுகின்ற கண்ணீர் துளிகளும் வீன்போவதில்லை என்பது எமது ஈமானிய நம்பிக்கையும் கண்முன்னால் உள்ள சான்றுகளுமாகும். எனவே, இதுவரை காலமும் நமக்கு இருந்த அல்லாஹ்வினுடனான தொடர்பும் அவனிடம் அலட்டிக்கேற்கின்ற பிரார்த்தனையும் தஹஜ்ஜுத் நேர தொழுகைகளும் தஸ்பீஹ் இஸ்திஃபார் போன்ற இதர வணக்கங்களும் எம்மை விட்டு இனிமேல் மறைந்துவிடக்கூடாது. எமக்கு கிடைத்திருக்கின்ற இந்த மகத்தான வெற்றியின் சாதக பாதகங்கள் அனைத்தும் எமது கரங்களிலேயே இருக்கிறது. நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அவனுக்கு அடிபணிந்து அவனை அதிகமதிகமாக நெருங்கி கலிமாச் சொன்ன ஒரே காரணத்திற்காக அநீதி இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற அனைத்து எமது உறவுகளுக்கும் மறைமுகமான பிரார்த்தனைகள் செய்து வாழ்வோமாக இருந்தால் எமது இந்த வெற்றியில் அல்லாஹ் அருள்புரிவான். அந்த ரப்புல் ஆலமீனை விட்டு தூரமாகி பாவங்களில் மூல்குவோமாக இருந்தால் அவனது சோதனை மீண்டும் எந்த வடிவத்தில் வரும் என்பது நமக்குத்தெரியாது. காலங்களை புரட்டுகின்ற அவனுக்கு மாத்திரமே அதுவெளிச்சம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

இதே வேலை, அல்லாஹ்வுடைய வல்லமையையும் அவனது தன்னிகரில்லா நிர்வகிப்புத்தன்மையையும் இந்த இடத்தில் அதிகம் ஞாபகப்படுத்த கடமைப்பட்டிருக்கின்றோம். ஏனெனில் சிருபான்மையாக வாழ்கின்ற எமக்கு இறைவனின் கருனையைத்தவிர வேரெதுவும் இருக்கவில்லை. எம்மிடத்தில் பௌதீகரீதியாக இந்த அநியாயக்காரர்களை எதிர்கொள்வதற்கு எதுவித பலமும் இருக்கவில்லை. இந்த பலவீனத்தை  அறிந்த றஹ்மான்தான் எம்மீது அவனது கருணையை சொறிந்துள்ளான். ஒரே கட்சிக்குள் நீண்ட காலமாக இருந்தவர்களை பிரிக்க திட்டமிட்டது யார்? அந்த சிந்தனையை உதிப்பாக்கியது யார்? நேற்று செய்வதறியாது குணிந்து கொண்டிருந்த எம்மை இன்று தலை நிமிற வைத்தது யார்? யாருடைய நிருவாகத்திட்டம்? யாருடைய துள்ளியமான திட்டமிடல்? என்ற கேள்விகளை அடுக்கினால் அதற்கான பதில் ஒன்றே ஒன்றுதான் அதுதான் அல்லாஹ், அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்பதாகும். எனவே, காரியம் முடிந்நதவுடன் அவனை மறந்துவிடாமல் அதிகமதிகம் அவனை துதிக்கின்ற நன்றியுள்ள மக்களாக இருப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.

அடுத்துää அல்லாஹ்வினுடைய மிகப்பெரும் அருள்தான் பிரிந்திருந்த முஸ்லிம் தலைமைக்குழுக்களை பொதுபலசேனாவை வைத்து இறைவன் ஒற்றுமைப்படுத்தியது. இந்த ஒற்றுமையைப்பார்த்த எந்த முஸ்லிமாலும் சந்தோசப்படாமல் இருக்க முடியாது. ஒற்றுமைப்பட்டதினால் மிகப்பெறிய சாதனைகளை சாதிக்கமுடிந்தது. இந்த ஒற்றுமை மீண்டும் நீடிக்க வேண்டும் என்பது சமூக நலனை விரும்புகின்ற ஒவ்வொரு முஸ்லிமுடைய அவாவாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதற்கு சிலவிட்டுக்கொடுப்புக்கள் அத்தியவசியம். உண்மையில் இது மனதுக்கு மிகவும் பாரமான ஒன்று என்பது எல்லோரும் அறிந்த விடயம். எனினும் விட்டுக்கொடுப்பென்பது உயர்ந்த ஒரு பண்பு. அதனை விசாலமான மணம் படைத்தவர்களால்தான் செய்ய முடியும். இஸ்லாமிய வரலாற்றில் ஹ{ஸைன் ரழி அவர்கள், தலைமத்துவத்துக்கு அதிக தகுதி இருந்தும் கூட முஆவியா ரழி அவர்களுக்காக சமூக ஒற்றுமையைக் கருத்திற்கொண்டு விட்டுக்கொடுத்தார்கள். இந்த விட்டுக்கொடுப்பானது அவர்களின் அந்தஸ்தை முஃமின்களின் உள்ளத்திலே உயர்த்தியதே தவிர தாழ்வை ஏற்படுத்தவில்லை. இன்றைக்கும் வரலாறு அதை மெச்சிப்பேசுகிறது. எனவே, இதனை கருத்திற்கொண்டு முஸ்லிம் சமூக தலைமகள் இனிவரும் காலங்களில் நடந்து கொண்டால் இப்பிரிவினையில் குளிர் காயும் இஸ்லாமிய விரோத சக்திகளுக்கு மிகப்பெரிய சாவுமணியாக இருக்கின்ற அதே வேளை அல்லாஹ்வினுடைய அருளும் தொடர்ந்து இருக்கும். அல்லாஹ் அதற்காக உள்ளங்களை திறந்து கொடுப்பானாக.

அடுத்து இந்த இடத்தில் இன்னுமொரு அம்சத்தையும் இறுதியாக கோடிட்டு காட்ட விரும்புகின்றேன். அதாவது, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றுமுள்ள பல தஃவா அமைப்புக்கள் மைத்திரியை பகிரங்கமாக ஆதரிக்கவில்லைää அவர்கள் தங்களது கடமையை சரிவரச்செய்யவில்லைää இன்னும் சொல்லப்போனால் அவர்களை தறக்குறைவான வார்த்தைகளால் கூட சமூக வளைத்தளங்களினூடாக சிலர் விமர்சனம் செய்வதை பரவலாக அவதானிக்க முடிகின்றது. உண்மையில் இது மிகவும் கவலைக்கிடமான அம்சமாகும். பொறுப்பு வாய்ந்த அதிலும் குறிப்பாக மார்க்க ரீதியான அமைப்புக்கள் தனிப்பட்ட நபர்கள் சிந்திப்பது போன்று சிந்திக்க முடியாது. ஏனெனில்ää நாம் சிறு பாண்மையாக வாழ்கின்ற சமூகம். அப்படியிருந்தும் இந்த நாட்டிலே எத்தனையோ இஸ்லாமிய மார்க்கத்திற்கு பிரத்தியோகமான சலுகைகள் எம் சமூகத்திற்கு தரப்பட்டிருக்கின்றன அல் ஹம்துலில்லாஹ். இவற்றைப் பார்க்கும் போது சமூகத்தலைமைகள் எவருடைய ஆட்சி வந்தாலும் அந்த சலுகைகள் பரிக்கப்படக்கூடாது என்ற மிகப்பெரும் பொது நலனை கருத்திற்கொண்டுதான் தாங்கள் பகிரங்கமாக ஆதரவு தெரிவிப்பதிலிருந்து விலகிக்கொள்கிறார்கள்.

இதில் ஏற்படும் நடைமுறைச்சிக்கல்கள் யாவரும் அறிந்ததே. ஏனெனில் அவர்கள் சமூகத்தின் பல பிரச்சினைகளுக்கும் முகம் கொடுப்பவர்கள். நிதானமாக சிந்திதுத்தான் அவர்கள் எந்த முடிவையும் எடுக்க வேண்டிய கடமைப்பாட்டில் இருக்கின்றனர். மைத்திரியின் வெற்றியை மாத்திரம் கருத்திற்கொள்ளாமல் வெற்றி தோல்வி ஆகிய இரண்டினுடைய சாதக பாதகங்களை வைத்தே பொறுப்பு வாய்ந்த நிருவணங்கள் முடிவெடுக்க வேண்டி இருக்கும். உதாரணமாக, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்பது ஒரு சிறு குழுவினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு அமைப்பு கிடையாது. மாறாகää இலங்கையில் வாழும் சகல முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பொறுப்பு வாய்ந்த நிருவணமாகும். தவறுகள் மனிதன் என்ற ரீதியில் எல்லோருக்கும் ஏற்படத்தான் செய்யும். சில நேரங்களில் தவறு என்று சிலர் நினைக்கலாம் ஆனால்ää தூர நோக்குடன் சிந்தித்தால் அவை தவறாகவே இருக்காது.

குறிப்பாக, இப்படியான கல்விமான்கள் கொண்ட நிருவணங்களை வாய்க்குவந்தாற்போல் விமர்சித்து விடக்கூடாது. ஒழுக்கமான முறையில் அனுகப்பழகிக்கொள்ள வேண்டும். ஏனெனில், அவர்கள் சமூகத்துக்கு நாம் அறியாத எத்தனையோ பணிகளை தியாகத்தோடு செய்கின்றனர். எத்தனையோ பிரச்சிணைகளை நம் சார்பாக எதிர் கொள்கின்றனர். அவைகளை மனதில் வைத்து அவர்களுக்குறிய கண்ணியத்தை கொடுத்து நடந்து கொள்வது நன்றி உணர்வுள்ள ஒவ்வொரு முஸ்லிமின் பண்பாக இருக்கும். சில சகோதரர்கள் இவ்விடயத்தில் கட்டுக்கடங்காமல் இருப்பது கவளையளிக்கின்ற ஒன்றாகும். அல்லாஹ் அவர்களுக்கு நேரான வழியைக்காட்ட வேண்டும். ஒரு சமூகத்தின் தலைமத்துவ கட்டுக்கோப்பை முழுமையாக உடைத்துவிட்டால் அதற்குப்பிறகு சமூகத்தின் நிலை என்னவாகும் என்பதை சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம். சில நேரங்களில் இப்படிப்பட்டவர்கள் சமூகத்தில் இருப்பது தவிர்க்க முடியாததாகக்கூட போய்விடும். ஆனால் பொது மக்கள் மிக விழிப்பாக இருந்து கொள்ளவேண்டும். உலமாக்கள், இமாம்கள் போன்ற நல்ல மனிதர்களை தூற்றிப்பழக்கப்பட்டவர்களால் எப்படி இஸ்லாம் விரும்பும் ஒழுக்க விழுமியங்கள் உள்ள சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்? இமாம் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும் பின்வரும் கூற்று இவ்விடத்தில் மிகப்பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

"சில மனிதர்கள் எப்போதும் அடுத்த மனிதர்கள் செய்த நலன்களை மறந்து அவர்களை விமர்சித்துக்கொண்டும் அவர்களுடைய குறைகளை கூறிக்கொண்டுமே இருப்பர். இவர்கள் ஈயைப்போன்றவர்கள். ஈயானது நல்ல பகுதிகளை விட்டுவிட்டு காயமுள்ள பகுதியில்தான் மொய்த்துக்கொண்டிருக்கும். அது போன்றுதான் இவர்கள்.  இது இவர்களின் சிந்தனை பழுதடைந்து விட்டது என்பதற்கும் உள்ளம் துற்பிடித்துவிட்டது என்பதற்குமான அடையாளமாகும்."

எனவேää நாம் அல்லாஹ்வை அதிகமதிகம் நெருங்கி எம்மை சுயவிசாரனை செய்து நன்மையை ஏவி தீமையை தடுத்து இஸ்லாத்தை அந்நிய மக்களிடம் கொண்டு செல்வதற்கு நானும் ஒரு பங்காளியாக இருக்க வேண்டுமென்ற உயர்ந்த இலக்கோடு வாழ்ந்து மரணிப்பதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக.

MFM சிபான் (பலாஹி) BA (Hons)
எகிப்து, அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம்



 
Top