GuidePedia

உலகக்கிண்ண தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் மோதல் அதிக ரசிகர்கள் பார்த்த சாதனையை நிகழ்த்தப் போவதாக விளையாட்டு துறை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் பி பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. பெப்ரவரி 15ம் திகதி, இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன.
இவ்விரு அணிகளின் மோதல் எப்போதும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும். அதற்கு ஏற்ப இரு அணிகளும் வாழ்வா, சாவா என ஆக்ரோஷமான ஆட்டத்தை ரசிகர்களுக்கு விருந்தளிப்பர்.
கடந்த 2011ம் ஆண்டு மொகாலியில் நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் இந்தியா வென்று இறுதி போட்டிக்குள் சென்றது.
இந்த போட்டிக்கு பிறகு இதுவரை இவ்விரு அணிகளும் மோதிக் கொள்ளவில்லை. மொகாலியில் நடைபெற்ற கடந்த உலகக்கிண்ண அரையிறுதி போட்டியை, உலகமெங்கிலும் 988 மில்லியன் ரசிகர்கள் கண்டு களித்திருந்தனர்.
இந்நிலையில் அவுஸ்திரேலிய உலகக்கிண்ண போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியை 1 பில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப்பெரிய போட்டி இதுவாகத்தான் இருக்கும் என்று அந்த நாட்டு விளையாட்டு துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.



 
Top