GuidePedia

பிரபல சமூக சேவையாளரும் ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் முக்கியஸ்தருமான அபூபக்கர் சாஹிப் இன்று புதன்கிழமை ராகம வைத்தியசாலையில் காலமானார்.

புதுக்கடை இக்பால் ஹோட்டல் முன்னாள் உரிமையாளரான இவர், முஸ்லிம் சமூகம் தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களில் முக்கிய பங்காற்றியவராவார். ஈரான் இஸ்லாமிய புரட்சியில் தீவிர ஆதரவாளரான இவர், சிறிதுகாலம் நோய்வாய்ப்பாட்டு வத்தளை, ஹுனுப்பிட்டியில் வசித்து வந்தார்.

இதற்கு சிகிச்சை பெறுவதற்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர் காலமானார். இவரது ஜனஸா நல்லடக்கம் இன்று மாலை ஹுனுப்பிட்டியில் நடைபெறவுள்ளது.



 
Top