GuidePedia

ரஷியாவின் சரடோவ் நகருக்கு அருகே எங்கெல்ஸ் பகுதியில் கட்டிடப்பணியில் ஈடுபட்டிருந்த கிரேனில் ஏறி ஒற்றை கையை பிடித்துக்கொண்டு தொங்கி இளைஞர் ஒருவர் சாகசம் செய்துள்ளார்.
பல நூறு அடி உயரத்தில் உள்ள கிரேனின் நுனியில் ஒற்றை கையுடன் அவர் தொங்கும் காட்சி நம்மையே பயத்தில் உறைய வைக்கிறது. 20 வயதான அலெக்சாண்டர் ருசினோவ் என்ற அந்த இளைஞர், ரஷியா முழுவதும் இது போன்று பல சாகசங்களை நிகழ்த்தியுள்ளார். உயரமான கட்டிடத்தின் மீது ஏறி பல சாகசங்களை அவர் செய்துள்ளார். எந்தவித பிடிமானமும் இல்லாமல், பாதுகாப்பு கவசங்களும் அணிந்து கொள்ளாமல் ருசினோவ் கிரேனில் செய்யும் சாகச புகைப்படங்கள் நமக்கு ஆச்சரியத்தை வரவழைக்கிறது.
ஆனால் எந்த சாகச செயலிலும் ஈடுபடும் முன்னர் ஒரு முறைக்கு இரு முறை யோசித்த பின்பே அவர் அதில் ஈடுபடுகிறார். எப்பொழுதும் தனக்கு கீழே உள்ள பூமியை பார்த்து கவலைப்பட்டதில்லை. என்னை நான் சங்கடப்படுத்தி கொள்வதில் மட்டும் தான் கவலைப்படுகிறேன் என்று அவர் கூறியுள்ளார். இணைய தளங்களில் சாகச நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து வந்த அவர், கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் தான் சாசக நிகழ்ச்சிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டார்.
அதன் பிறகு தனது சொந்த நகரமான சரடோவில் உள்ள கட்டிடங்களை தாண்டியும், வோல்கா நிதியில் குதித்தும், சுவர்கள் மீது ஏறியும் சாகசம் செய்து வருகிறார். யூ டியூபில் பதிவேற்றப்பட்டுள்ள இவரது சாகசங்களை பார்வையிடும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது. இதனால் சரடோவின் ஸ்பைடர்மேன் என்றே இவர் அழைக்கப்படுகிறார்.



 
Top