GuidePedia

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக நேற்று மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்றதைத் தொடர்ந்து, இன்று கொழும்பின் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக பரவலாக வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாகவே இந்த வதந்திகள் பரப்பப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
கொழும்பில் இன்று சில இடங்களில் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியாகியதுடன், இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியும், விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்கி தாக்குதல் நடத்துகின்றார்கள் என்ற செய்தியும் பரவலாக பரப்பப்பட்டு வருகின்றது.
மக்களைக் குழப்பும் நோக்கிலேயே, இவ்வாறான வதந்திகளை தோற்றுப்போன எதிரணியினர் பரப்பிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச, மற்றும் பொதுபல சேனா போன்றவர்களே, மீண்டும் புலிகள் வந்துவிட்டார்கள் என்ற கதைகளைப் பேசி மக்கள் மத்தியில் குழப்பகரமான நிலைமையை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
“மீண்டும் புலிக்கதை பரப்பப்படுகிறது. அந்த செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை”. மக்களை அவதானமாக இருக்குமாறு இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினராக ராஜித சேனாரத்ன கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



 
Top