முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகா அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
அதன்படி சரத் பொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்பட்ட அனைத்தும் அவருக்கு திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி சரத் பொன்சேகா முன்னாள் ஜெனரல் என அழைக்கப்படுவார். மேலும் அவருக்கு வாக்குரிமை அளிக்கப்படும்.
ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் சமிந்த சிறிமல்வத்த இத்தகவலை உறுதி செய்துள்ளார்.