GuidePedia

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றம் வர சகல முயற்சிகளும் எடுக்கும் இவ்வேளையில் தற்போதைய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக வர சட்டசிக்கல் உள்ளதாக தெரியவருகின்றது.
இவர் சார்ந்த ஐ.ம.சு கூட்டமைப்பின் 2011ம் ஆண்டு சமர்பிக்கப்பட்ட தேசிய பட்டியலில் மஹிந்தவின் பெயர் குறிப்பிடப்படாததே இதற்கு காரணமாகும்..
இப்பொழுது மஹிந்த எதிர்கட்சி தலைவராக ஆர்வமாகியுள்ளதால் இந்த சட்டச்சிக்கல் இவருக்கு எதிராக உள்ளது.
எனினும் இவரை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வர இவரின் முக்கிய விசுவாசியான எல்லாவெல மேதாநந்த தேரர் தனது நாடாளுமன்ற பதவியை ராஜினாமா செய்து இவருக்கு வழி விடவிருப்பதாக தெரியவருகின்றது.



 
Top