GuidePedia

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் நேற்று புதன்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச, அமைச்சர் பதவி வகித்த காலத்தில் முறைகேடான முறையில் சொத்துக்களை சேர்த்தார் என்றே அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் எங்கள் தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கடுவளையில், அதிசொகுசான வீடுகள் இரண்டை நிர்மாணித்தமை, அந்த பிரதேசத்தில் பல காணிகளை பலவந்தமாக கைப்பற்றியமை மற்றும் வீரவன்சவின் மனைவியினால் முறைகேடான முறையில் சொத்துக்களை குவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளே அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. 



 
Top