GuidePedia


இலங்கைக்கு விஜயம் செய்த பாப்பரசர் பிரான்சிஸ் தற்பேபாது காலி முகத்திடலில் விசேட திருப்பலி ஆராதனைகளை ஒப்புக்கொடுத்து வரும் நிலையில் இன்று மாலை மன்னாரிற்கு சென்று அங்கும் விசேட திப்பலி ஆராதனைகளை ஒப்புக்கொடுக்கவுள்ளார்.
இந்நிலையில், பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை விஜயம் குறித்து உலக நாடுகள் பலவற்றிலும் பரபரப்பாகப் பேசப்படுகின்றது. நேற்றுக் காலை இலங்கைக்கு வருகை தந்த பரிசுத்த பாப்பரசர், நாளை காலை 9 மணிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பயணமாகிறார்.
இலங்கை வரலாற்றில் 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னரே பாப்பரசரகளின் வருகைகள் இடம்பெற்றன.
இலங்கைக்கு முதன் வருகை தந்தவர் பரிசுத்த பாப்பரசர் 5 ஆவது சின்னப்பரே. இவருக்குப் பின்னர் 1995 ஆம் ஆண்டில் அருளப்பர் இலங்கைக்கு திருப்பயணம் மேற்கொண்டார். இவருக்குப் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் 3 ஆவது பாப்பரசராக பிரான்சிஸ் திகழ்கின்றார்.
இவ்வாறு பாப்பரசர்கள் வருகை தந்த போதெல்லாம் இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளமை இங்கு விசேட அம்சமாக கருதப்படுகின்றது.
முன்னதாக, 1970 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த டட்லி சேனநாயக்க பாப்பரசரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைத்த போதிலும், பாப்பரசர் இலங்கைக்கு வருகை தந்த போது முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்கவே அவரை வரவேற்றார். பாப்பரசரின் வருகைக்கு முன்னர் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பாட்டு சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக மாறினார்.
இதேபோல், 1995 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த டி.பி.விஜயதுங்க பாப்பரசரை அழைத்தாலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவே வரவேற்றார்.
தற்போதும், முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ நேரில் சென்று பாப்பரசருக்கு அழைப்பு விடுத்த நிலையில் புதிய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவே அவரை வரவேற்றுள்ளார்.
இந்நிலையில் பாப்பரசர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போதெல்லாம் ஆட்சிமாற்றம் ஏற்றபட்டுள்ளமை விசேடமாக சுட்டிக்காட்டத்தக்கது.



 
Top