GuidePedia

ற்போதய புதிய அரசின் அமைச்சரவை நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் சமயங்களுக்கான தனித்தனி அமைச்சுகள் வழங்கப்பட்டு வருகின்றமை வரவேற்கத்தக்கது. என்ற போதும் முஸ்லிம் விவகார அமைச்சு மற்றும் இன்னும் வழங்கப்படாத நிலைமையில் சிலரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. 


இந்நிலையில் தற்போதைய அரசில் பங்காளிகளாக முஸ்லிம்கட்சிகலும் மாற வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளிச்சென்றவர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் பா.ம.உ அவர்கள் என்பது மறுப்பதற்கில்லை. அவருக்கு அமைச்சுப்பதவிகளில் ஒன்றாவது வழங்கப்படும் என முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்த போதும் அது இதுவரை ஏமாற்றமாகவே காணப்படுகின்றது. என்றபோதும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பத்து வருடங்களுக்கு மேல் பணிபுரிந்து இன்றுவரை அதன் வளர்ச்சிக்காக பாராளுமன்றம் வரை குரல் கொடுத்து வருபவர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் பா.ம.உ அவர்கள். 


பல்வேறு அமைச்சர்கள், பணிப்பாளர்களின் காலப்பகுதியில் பணிபுரிந்து திணைக்களம் தொடர்பான பூரன அறிவு கொண்டவர் என்ற வகையில் அவரே இவ்வமைச்சுக்கு பொருத்தமானவராக காணப்படுகின்றார். எனவே இவ்வமைச்சுப்பதவியினை வழங்க உரிய அரசியல் கட்சி தலைவர்களும் சமூக புத்திஜீவிகளும் நடவடிக்கை எடுப்பது பொருத்தமாக அமையும்



 
Top