GuidePedia

சமாதானத்திற்கு முக்கியத்துவம் வழங்கும், சமாதானத்தை வலியுறுத்தும் ஒரு அரசாங்கமாக தமது அரசாங்கம் அமையுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று காலை கொழும்பு வந்தடைந்த பரிசுத்த பாப்பரசரை வரவேற்று உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயம் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதாக குறிப்பிட்ட அவர், குறிப்பாக தான் ஜனாதிபதியாக பதவியேற்று சில நாட்களில் இந்த விஜயம் அமைந்துள்ளமையை நினைத்து பெருமையடைவதாக தெரிவித்தார்.
சமயங்களுக்கு தாமும் தமது நாட்டு மக்களும் மதிப்பளிப்பதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி, நாட்டின் சமாதானத்திற்காக பிராத்திக்குமாறு பாப்பரசரை கேட்டுக்கொண்டார்.
பரிசுத்த பாப்பரசரை, இலங்கை அரசாங்கத்தின் சார்பாகவும் நாட்டு மக்கள் சார்பாகவும் வரவேற்பதாக இதன்போது குறிப்பிட்டார்.



 
Top