GuidePedia

எந்தவொரு அமைச்சரோ, பிரதி அமைச்சரோ அல்லது அதிகாரத்தில் உள்ள எவராவது ஒருவர் சட்டத்தை கையில் எடுத்து, முரணாக செயற்பட்டால் தராதரம் பார்க்காமல் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஜனாதிபதி மைத்தரிபால சிரிசேன இன்று தெரிவித்தார்.
புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
அதிகாரமும் ஆட்சியும் நிலைத்தல்ல. உலகில் மரணத்தை வென்ற மனிதன் போன்று செயற்படுவது சிறந்த பழக்கமல்ல. நாம் தேர்தலில் அளித்த வாக்குறுதியைப் போன்று அமைச்சரவையை 30 இற்குள் குறைத்துள்ளோம் எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார். 



 
Top