ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் நிமால் சிறிபாலடி சில்வா, பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா, பொருளாளர் டலஸ் அழகப்பெறும, சுசில் பிரேமஜயந்த, பவித்ரா வன்னியாராச்சி மற்றும் மகிந்தாநந்த அளுத்கமகே ஆகிய முன்னாள் அமைச்சர்களும் மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் இந்த சந்திப்பில் பங்குகொண்டிருந்தனர்.
இதன்போது, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் இதன்போது உறுதியளித்துள்ளனர்.