GuidePedia

குடும்பவாதத்தினால் தலை வீங்கியவர்களுக்கு தேர்தல் முடிவு நல்ல ஓர் பாடமாக அமைந்துள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஒருவர், மக்கள் எவ்வளவு பிரபல்யமாக இருந்த போதிலும், குடும்ப வாதத்தினால் தலை வீங்கினால் ஏற்படக் கூடிய தலைவிதி இம்முறை ஜனாதிபதி தேர்தலின் மூலம் புலனாகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் முடிவானது அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பாடம் கற்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதிகாரம் இருக்கும் போது நடந்து கொள்ள வேண்டிய விதம், அதிகாரத்தைப் பயன்படுத்துவது எவ்வாறு? அனைத்து மக்களுக்கும் சேவையாற்றுவது எவ்வாறு போன்ற காரணிகள் உதாசீனம் செய்யப்பட்டு ஆட்சி நடத்தப்பட்டது.
உறவினர், நண்பர்களின் நலன்களைப் பற்றியே சிந்தித்து அவர்களின் நலனுக்காக பாடுபடும் தலைவர்கள் இவ்வாறான நிலைமைகளை எதிர்நோக்க நேரிடும் என்பது கண்கூடாகியுள்ளது.
எனினும் தாமே தலைவர் என இந்த நாட்டு மக்களின் முன்னிலையில் எவராலும் கூற முடியாது.
தலைவர் ஒருவர் அதிகாரத்தில் இருக்கும் போது அவரைச் சுற்றி இருந்து கொண்டு நன்மைகளை அனுபவித்தவர்கள், அவர் அதிகாரத்தை இழந்ததும் கறிவேப்பிலையை போன்று தலைவரை தூக்கி எறியும் நிலைமையை அண்மைய நாட்களில் அவதானிக்க முடிந்தது என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.



 
Top