(க.கிஷாந்தன்)
நானும் இராஜங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணனும் சேர்ந்து மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி மக்களை சுபீட்சமாக வாழவைப்போம் என தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி.திகாம்பரம் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டிற்கான தைப்பொங்கல் விழா தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் ஹட்டன் டீ.கே.டபிள்ய10 மண்டபத்தில் நடைபெற்றபோது அவர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்……
மலையகத்தில் சில அமைச்சர்கள் மலையக மக்களுக்கு பணம்ää தகரங்கள்ää மின் அழுத்திகள் போன்றவற்றை கொடுத்து ஏமாற்றலாம் என நினைத்தார்கள். மக்களை ஏமாற்ற நினைத்த அந்த தலைவர்களுக்கு மலையகத்தில் உள்ள அனைத்து மக்களும் நல்ல பாடம் ஒன்று கற்பித்துகொடுத்தார்கள். 1994 ஆம் ஆண்டு முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை ஏற்படுத்தி கொடுத்தார்கள். பெருந்தோட்டங்களுக்கு கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுப்பதற்காக இதனை ஏற்படுத்தினார். ஆனால் 2005 ஆம் ஆண்டு முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆட்சிக்கு வந்து அதனை இல்லாதொழித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் சென்று நான் கேட்டது மலையக மக்களுக்கு தனி வீடு அமைக்க வேண்டும். இதனால் நானும் இராஜங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணனும் சேர்ந்து 100 நாள் வேலை திட்டத்தை நுவரெலியா மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்க இருக்கின்றோம் என்று அவர் தெரிவித்தார்.