GuidePedia

(மக்கள் நண்பன் - சம்மாந்துறை  அன்சார்)
சம்மாந்துறையின் மண்ணின் மைந்தனாக நோக்கப்படும் மறைந்த பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமாகிய மர்ஹும் அன்வர் இஸ்மாயில் அவர்களின் மரணம் தொடர்பாகவும் விசாரனை தேவை என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இன்றைய மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான அரசாங்கத்தில் குற்றச் செயல்கள், ஊழல் தொடர்பாக பழைய பைல்கள் துாசி தட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் சம்மாந்துறை மக்களுக்கு மாத்திரமல்ல சகலருக்கும் துக்கத்தை ஏற்படுத்தியிருந்த மர்ஹும் அன்வர் இஸ்மாயில் அவர்களின் திடீர் மரணம் குறித்தும் விசாரணை செய்யப்படல் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்
இவரின் மரணத்திற்கு முன்னர் தான் வகித்திருந்த அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்து அந்த இடத்தை பசீல் ராஜபக்ஸவுக்கு விட்டுக் கொடுக்கும்படி கேட்கப்பட்டதாகவும் அதற்கு மர்ஹும் அன்வர் இஸ்மாயிலும் அன்னாரின் ஆதரவாளர்களும் பல நிபந்தனைகளை விதித்து அவைகளை நிறைவேற்றும்படி வேண்டியதாகவும் அதன் பின்னரே இவரின் மரணம் சம்பவித்தது என்றும் மக்களால் அன்று தெரிவிக்கப்பட்டது.
இவரின் திடீர் மரணம் சகலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தும் அரசியல் அதிகாரம் மிகைத்திருந்ததால் எவராலும் எதுவும் பேச முடியாத நிலை அன்று காணப்பட்டது.



 
Top