GuidePedia

நாட்டில் விரவிக் காணப்படும் வன்முறைகள் மற்றும் ஊழல் ஆகியவற்றை மாற்றியமைக்க புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
தான் எதிர்நோக்கிய தோல்வி தற்காலிகமானதென கூறிய மஹிந்த, தனது வெற்றி தோல்வி சகஜமென்றும், வெற்றி தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத சிலர் அங்கும் இங்கும் தாவுவதாக தெரிவித்தார்.
நாடு பிளவுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்றும் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடவுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை, எதற்காகவும் அரசியலை விட்டும் நாட்டை விட்டும் ஒடப்போவதில்லையெனெ தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



 
Top