(எம்.எம்.ஜபீர்)
இலங்கையின் 7ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக கடந்த 8ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்றதையடுத்து அம்பாரை மாட்டத்தின் சம்மாந்துறை தொகுதியில் நேற்று மாலை வெற்றிக் கொண்டாட்டம் சிறப்பாக இடம்பெற்றது.
இவ் வாகன பேரணி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் இடம்பெற்ற வாகன பேரணி சம்மாந்துறை மணிக்கூட்டு; கோபுரசந்தி முன்னால் ஆரம்பமாகி பிரதான வீதி மற்றும் உள்வீதி வழியாக சென்று மீண்டும் மணிக்கூட்டு கோபுர சந்தியில் நிறைவு பெற்றது.
இதன்போது இளைஞர்கள், பொது மக்கள் ஆதரவாளர்கள் தத்தமது பிரதேசங்களில் பட்டாசு கொழுத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.




