GuidePedia

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என ஜாதிக ஹெல உறுமயவின் மேல்மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நூறு நாள் செயற் திட்டத்தின் பின்னர் தேசப்பற்றுடைய அரசாங்கமொன்று அமைக்கப்படும். புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தை சீர்குலைக்கப் போவதில்லை.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் பெரும்பாலும் பொதுத் தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலில் பிரதமர் பதவிக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவார்’ என்றும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியிலிருந்து மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்த உதய கம்மன்பில இறுதி நேரத்தில் மீண்டும் அப்போதைய ஆளும் கட்சியில் இணைந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தனது ஆதரவினை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



 
Top