GuidePedia

ஜனாதிபதித் தேர்தளில் மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தோல்வியை தழுவியதன் பின் சுதந்திர கட்சியின் தலைமைதுவம் யார் கையில் என்ற சர்ச்சை தொடர்ந்து வந்தது அறிந்ததே.
ஒரு குழு மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் இன்னுமொரு குழு புதிய ஜனாதிபதி மைத்ரிக்கு ஆதரவு எனவும் தலைமைத்துவம் மைத்ரிக்கே செல்ல வேண்டும் எனவும் அறிவித்திருந்த வேளை,
சற்றுமுன் சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த அவர்கள் மைத்ரிக்கு கையளிக்க இணக்கம் தெரிவித்து உள்ளதாக  நம்பத்தகுந்த கொழும்பு ஊடகங்கள் சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளன.



 
Top