(பழுலுல்லாஹ் பர்ஹான்)
ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுடனான விஷேட சந்திப்பொன்று 14-01-2015 நேற்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் பழைய மட்டக்களப்பு தொகுதி தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இவ் விஷேட சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள், பொது மக்கள்,இளைஞர்கள்,காத்தான்குடி நகர சபையின் பிரதித் தவிசாளர் ஜெஸீம் ,காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அலி சப்ரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான தற்போதய காலப்பகுதியில் எவ்வாறு மற்றவர்களுடன் ஒற்றுமையாக, பரஸ்பரமாக நடந்து கொள்ள வேண்டுமென்பது தொடர்பாக விஷேட உரை நிகழ்த்தினார்.