GuidePedia

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரும் ஒரு ராஜாங்க அமைச்சரும் 4 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் நேற்று பிற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
முஸ்லிம் மத விவகார, தபால் சேவை அமைச்சராக அப்துல் ஹலீம் நியமிக்கப்பட்டதோடு சுகாதார ராஜாங்க அமைச்சராக ஹசனலி நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்ளக போக்குவரத்து பிரதி அமைச்சராக எம். எஸ். தெளபீக்கும் வீடமைப்பு சமுர்த்தி பிரதி அமைச்சராக அமீர் அலியும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதோடு சமூக சேவை, பிரதி அமைச்சராக ரஞ்சன் ராமநாயக்கவும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சராக வசந்த அலுவிஹாரவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்றனர்.
ஏற்கெனவே 27 அமைச்சர்களும் 10 ராஜாங்க அமைச்சர்களும் 08 பிரதி அமைச்சர்களும் பதவி ஏற்றுள்ள நிலையில் அமைச்சர்கள் தொகை 28 ஆகவும் ராஜாங்க அமைச்சர் தொகை 11 ஆகவும் பிரதி அமைச்சர் தொகை 12 ஆகவும் உயர்ந்துள்ளது.









 
Top