இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியும் 6ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, இன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்தார்.
இதற்கான விஷேட நிகழ்வுகள், இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன, 9ஆம் திகதி மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில், உயர் நீதிமன்ற நீதியரசர் கே.எல்.ஸ்ரீபன் முன்னிலையில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
