பாதுகாப்பு செயலாளராக இதுவரை காலமும் பணியாற்றி வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோட்டபாய ராஜபக்ஷவின் இடத்திற்கு சுற்றாடற்துறை அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்த பி.எம்.யு.டி.பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ கண்காணித்ததைப்போல புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேரடி நிர்வாகத்திலேயே பாதுகாப்பு அமைச்சு தொடர்ந்தும் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும் என்று பரவலான பேச்சுக்கள் இடம்பெற்ற நிலையிலேயே பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
