(எம்.எம்.ஜபீர்)
சவளக்கடை விவசாய கேந்திர நிலையத்தின் கீழுள்ள அன்னமலை நீர்ப்பாசன பிரிவில் சுமார் 7500 ஏக்கர் வேளாண்மை நீரின்றி கருகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த மழை வெள்ளம் காரணமாக பிரதேசத்திலுள்ள குளங்கள் உடைப்பெடுக்கும் என்ற அச்சத்தினால் குளங்களின் வான்கதவுகள் மூடப்படாததனாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இப்பிரதேச விவசாயிகள் குடலைப்பருவத்திலுள்ள வேளாண்மையை காப்பாற்றும் நோக்குடன் வவுசர்களினூடாக தமது வயல்களுக்கு பலமைல் தூரத்திற்கு அப்பால் நீரை எடுத்து வந்து பாய்ச்சி வருகின்றனர்.
தேர்தலில் போது பிரதேச மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவில்லை என்ற காரணத்திற்காகவே இவ்வாறு அம்பாரை மாவட்டத்திலுள்ள பெரும்பான்மை இனத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள் இப்பிரதேச விவசாயிகளுக்கு அநீதி இழைப்பதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.